போகிற போக்கைப் பார்த்தால் ஆஸ்காரை விட சைமா பெஸ்ட் என்று மாற்றிக் கொள்வார்கள் போல! அந்த அளவுக்கு தென்னிந்தியாவின் மொத்தக் கவனமும் துபாய் மீதுதான்!
பாலிவுட் பார்க்கில்தான் சைமா அவார்ட் நிகழ்ச்சிகள். ஆஸ்காரில் எப்படி ரெட்கார்பெட் நிகழ்ச்சி அமைந்திருக்கிறதோ அதே பாணியில் துபாயிலும். நம்ம நடிகைகள் மார்பு மையம் தெரிகிற அளவுக்கு கவுன் அணிந்து நடப்பதே அழகு.!
இம்முறை விருதுகளில் ஐந்தை அள்ளிய பெருமை விஜய்யின் மெர்சல் படத்துக்கு. சிறந்த டைரக்டர் அட்லி. இசை ஏஆர்ரகுமான்,வில்லன் எஸ்.ஜெ.சூர்யா, பாடகர் ஸ்ரீ ராம், பாடலாசிரியர் விவேக் என ஐந்து விருதுகள்.
இந்த விழாவில் சாமி 2 வை புரமோட் செய்வதற்காக சீயான் விக்ரம்,கீர்த்தி சுரேஷ், இயக்குநர் ஹரி உள்ளிட்ட குழுவினர் வந்திருக்கிறார்கள்.
அருவி டைரக்டர் அருன்பிறப்பு புருஷோத்தமன், கதாநாயகி அதிதி பாலன்,,சிறந்த நடிகராக ‘வேலைக்காரன்’ பட சிவகார்த்திகேயன், சிறந்த நடிகையாக ‘அறம் ‘ நயன்தாரா ஆகியோரும் பரிசுகளை வென்றிருக்கிறார்கள்.