சிவகார்த்திகேயன், நடிப்பில் உருவான ‘ரஜினிமுருகன்’ விரைவில் வெளியாகவுள்ள நிலையில் அவருடைய அடுத்த படம் குறித்த செய்திகள் வெளியாகியுள்ளது.இயக்குனர் அட்லியின் உதவியாளர் பாக்யராஜ் இயக்கத்தில் உருவாக உள்ள புதிய படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கிறார். இந்த படத்தில்சிவகார்த்திகேயன் முதல்முறையாக பெண் வேடத்தில் நடிக்கிறாராம். அதுவும் , அவ்வை சண்முகி’ கமல் போல பெரும்பாலான காட்சிகளில் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளாராம். இதன் காரணமாக பெண் வேடம் மிகவும் தத்ரூபமாக அமைய வேண்டும் என்பதற்காக ஹாலிவுட்டில் இருந்து மேக்கப்மேன் சீன் ஃபுட் (Sean Foot) என்பவரை வரவழைக்க படக்குழு முடிவு செய்துள்ளதாம். ஹாலிவுட் படமான ‘லார்ட் ஆப் தி ரிங்ஸ் மற்றும் ஷங்கர் இயக்கிய ‘ஐ’ போன்ற பல படங்களுக்கு இவர்தான் மேக்கப்மேன் என்பது குறிப்பிடத்தக்கது.இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிக்கும் நடிகையின் தேர்வு நடைபெற்று வருவதாகவும், ரஜினி முருகன் பட வெளியீட்டுக்கு பின்பு ,வரும் ஆகஸ்ட் மாதம் முதல் படப்பிடிப்பு தொடங்கும்என்கிறது கோலிவுட் வட்டாரம். சிவகார்த்திகேயன் பெண் வேடம் போடுவதை விரும்பாத அவரது ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனாராம்..