ஜார்ஜியாவுக்கு லொக்கேஷன் பார்க்க சென்றிருக்கிறார் சுந்தர்.சி.
‘அத்தரண்டிகி தாரேதி’ என்கிற தெலுங்கு படம் தமிழாக மாறுகிறது. சிம்புதான் ஹீரோ. இவருக்கு இரண்டு ஹீரோயின்கள். தெலுங்கில் சமந்தா நடித்த கேரக்டரில் மேகா ஆகாஷ் நடிக்கிறார். பிரனிதாவுக்குப் பதிலாக யாரை ஒப்பந்தம் செய்வார்கள் என்பது தெரியவில்லை.
தெலுங்கு படத்தில் அத்தையாக நடித்திருந்தார் நதியா. தமிழில் யாரைப் போடலாம் என தீவிரமான டிஷ்கஷன் நடந்தது. சுந்தர்.சி.யும் சிம்புவும் பல நடிகைகளின் பெயரை பரிசீலனை செய்து கடைசியில் குஷ்பு.ரம்யா கிருஷ்ணன் ஆகிய இருவரில் ஒருவரை நடிக்க வைக்கலாம் என்கிற முடிவுக்கு வந்தார்கள். மனைவியை தனது இயக்கத்தில் நடிக்க வைப்பதால் பல அசவுகரியம் ஏற்படலாம் என தயங்கினார். கடைசியில் சிம்பு சிபாரிசு ரம்யாவுக்கே!