‘அன்பானவன் ,அடங்காதவன்,அசராதவன்’ என்கிற படத்தைத் தயாரித்தவர் மைக்கேல் ராயப்பன். கேப்டனின் கட்சியில் எம்.எல்.ஏ.ஆகிவிட்டு பின்னர் விலகியவர். அம்மா ஆட்சியின்போது நடந்த சதுரங்க ஆட்டத்தில் கேப்டனுக்கு எதிராக நகர்த்தப்பட்ட காய் , ஒரு சோல்ஜர்.
சிம்பு தனக்கு சரியாக கால்ஷீட் தரவில்லை.2௦ கோடி நட்டம் என காலம் கடந்து புகார் அளித்தார். தயாரிப்பாளர் சங்கம் இருதரப்பையும் அழைத்து விசாரித்தது.
முடிவு தெரியவில்லை.
இந்த நிலையில் செக்கச்சிவந்த வானம் படத்தில் சிம்பு முக்கிய வேடத்தில் குறிப்பிட்ட கால கட்டத்தில் நடித்து முடித்துக் கொடுத்து விட்டார். இயக்குநர் மணிரத்னம் இயக்கும் படம் .
தற்போது சுந்தர்.சி.இயக்கத்தில் ஜார்ஜியாவில் படப்பிடிப்பு. சிம்பு நாயகன். இரட்டை நாயகிகள். அத்தையாக ரம்யா கிருஷ்ணன்.
தற்போது மீண்டும் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் கதவை தட்டியிருக்கிறார் மைக்கேல் ராயப்பன். தனக்கு நீதி வழங்க வேண்டும் என்பதாக!
இயக்குநர் மணிரத்னம் படத்தின் போது மூச்சு விடாமல் இருந்தவர் சுந்தர்.சி. இயக்கம் படப்பிடிப்பு நடக்கும் சமயத்தில்மட்டும் பிரச்னை பண்ணுவது ஏன்?
உள் நோக்கம் இருக்கிறது என்கிறார்கள். சிவனே என தொழிலைக் கவனித்துக் கொண்டிருக்கும் சிம்புவை முடிந்து போன விஷயத்துக்காக தொல்லை கொடுப்பது ஏன் என கேட்கிறார்கள் சிம்புவின் ரசிகர்கள்.
நல்லது நடக்க விடுங்கப்பா!