மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் கடந்த இரு தினங்களாக சென்னையில் உள்ள பிரபல மருத்துவமனை ஒன்றில் சர்க்கரை நோய் மற்றும் திடீர் மூச்சு திணறல் காரணமாக தீவிர சிகிச்சைபிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இன்று இவருக்கு 87வது பிறந்தநாள் என்பது குறிப்பிடதக்கது. . இச்செய்தி திரையுலகினர் மற்றும இவருடைய ரசிகர்களுக்கு பெரும் சோகத்தையும், வருத்தத்தையும் ஏற்படுத்தியுள்ளது. எம்.எஸ்.விஸ்வநாதன் உடல் நிலை குறித்து மருத்துவமனை வட்டாரம் கூறியுள்ளதாவது,சர்க்கரை நோய் மற்றும் முதுமைகாரணமாகவே அவர் உடல் நலம் குன்றியுள்ளது. இன்னும் இரு நாட்களில் அவர் வீடு திரும்புவார்.என்கிறது