ரஜினி – ஷங்கர் மீண்டும் இணையும் பிரமாண்ட படத்துக்கு ஒளிப்பதிவாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார் நீரவ் ஷா. இந்திப் படங்களில் பணியாற்றிவந்த நீரவ் ஷா, சண்டக்கோழி படத்தின் மூலம் தமிழில் ஒளிப்பதிவாளராக அறிமுகமானவர் நீரவ் ஷா.. தொடர்ந்து போக்கிரி, பில்லா போன்ற படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த்தான் மூலம் முன்னணி ஒளிப்பதிவாளர்களுள் ஒருவராக உள்ளார். இந்த நிலையில், ரஜினி மற்றும் ஷங்கர் கூட்டணியில் மீண்டும் பிரமாண்டமாக உருவாகவிருக்கும் எந்திரன் 2 படத்தின் ஒளிப்பதிவை நீரவ்ஷா ஏற்கிரராம். இப்படத்திற்கு முதலில் ரத்னவேலுதான் ஒளிப்பதிவு செய்வதாகக் கூறப்பட்டது. குறிப்பிடத் தக்கது. பட அதிபர் கலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பில் ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் படம் வரும் ஆகஸ்டில் தொடங்கி டிசம்பரில் முடிகிறது. அதற்கடுத்து ரஜினி – ஷங்கரின் எந்திரன் 2 என்ற பிரமாண்டம் மீண்டும் தொடங்குகிறது.