மச்சான் என்று தொடங்கினாலே பெண்களுக்கு ஒரு சிலிர்ப்புதான்!
“மச்சானை பாத்தீகளா மலைவாழத் தோட்டத்திலே” என்று தேடியவர்கள் கடைசியில் ‘சின்ன மச்சான் செவத்த மச்சானை ‘ இசை அமைப்பாளர் அம்ரீஷிடம் கண்டு பிடித்திருக்கிறார்கள்.
செமத்தியான பாடல். செந்தில் கணேஷ்-ராஜலட்சுமி என்பவர்கள் பாடி இருக்கிற பாடல். யூ டியூப்பில் 53 லட்சம் பேர் தாளம் போட்டிருக்கிறார்கள்.
தயாரிப்பாளர் டி சிவாவுக்கும் இசை அமைப்பாளர் அம்ரீஷ்க்கும் ஆனந்தமாக இருக்காதா?
“கூப்பிடு ஊடகங்களை !” என்று மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டார்கள் சிவா, அம்ரிஷ் கூடவே ஷக்தி சிதம்பரம்.
சிவா பேசுகையில் “இந்தப் பாட்டை கேட்டதுமே நிச்சயம் ஹிட் அடிக்கும் என்பதால் பாட்டை வாங்கி வைத்து விட்டேன்.இதற்கு பிறகுதான் அவர்களுக்கு பரிசே கிடைத்தது.அம்ரிஷ் இசையில் சார்லி சாப்ளின் 2 படத்துக்கு பயன் படுத்தப் பட்டிருக்கிறது”என்றார் .
இயக்குநர் ஷக்தி சிதம்பரம் பேசும் போது “அம்ரிஷ்க்கு இசைஞானம் அதிகம். அவரால் இன்னும் நிறைய ஹிட்ஸ் நமக்கு கிடைக்கப்போகிறது” என்றார்.
இசை அமைப்பாளர் அமைப்பாளர் அம்ரிஷ் இந்த பையனும் சிக்கன் சாப்பிடுவானா என்கிற அளவுக்கு அப்பாவியாகப் பேசினார்.
“பிரபுதேவா சார் எத்தனையோ டியூனுக்கு விதம்விதமாக டான்ஸ் ஆடி இருக்கிறார். வெற்றி பெற்றிருக்கிறார்.
சின்ன மச்சான் பாடலுக்கு அவர் ஆட நான் பெற்றிருக்கிறேன் வெற்றியை!
எனக்கான ஒரு இடம் சினிமாவில் ராகவா லாரன்ஸ் வழியாக மொட்டசிவா கெட்ட சிவா படத்தினாலும்,பிரபு தேவா சாரின் சார்லி சாப்ளின் 2 வழியாகவும் எனக்கு கிடைத்திருக்கிறது. பெருமையாக இருக்கிறது.இன்னும் பல வெற்றிகள் காத்திருப்பதாகவே கருதுகிறேன்”என்றார் அடக்கமாக.
இந்த விழாவில் சரிகம ஆடியோ நிறுவனத்தை சேர்த்த ஆனந்த தியாகராஜன் கலந்து கொண்டார்,