அரிமா நம்பி படத்தை தொடர்ந்து, ஆனந்த் சங்கர் தனது அடுத்த படத்துக்கும் நாயகி ப்ரியா ஆனந்தைத்தான் நாயகியாக ஒப்பந்தம் செய்தார்.இதில் கதாநாயகனாக விக்ரம் நடிக்கிறார். இன்னும் சில நாட்களில் இதன் படபிடிப்பு தொடங்க உள்ள நேரத்தில் இப்படத்திலிருந்து திடீரென விலகிக் கொள்வதாக ப்ரியா ஆனந்த் அறிவித்துள்ளார். இந்த திடீர் விலகலுக்கு காரணம் எதையும் அவர் தெரிவிக்கவில்லை. படக்குழுவினரும் இது பற்றி இதுவரை மூச்சு விடவில்லை. இந்நிலையில் ப்ரியா ஆனந்த் இது குறித்து தனது ட்விட்டரில் கூறியுள்ளதாவது, “விக்ரம் ரசிகர்களுக்கு எனது வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தப் படத்தில் என்னால் நடிக்க முடியவில்லை. ஆனாலும் படக் குழுவுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்,”என்று கூறியுள்ளார். ஆனால் இது குறித்து சற்றும் அலட்டிக்கொள்ளாத படக்குழு ப்ரியா ஆனந்துக்கு பதில் பிந்து மாதவியை களமிறக்க முயற்சி மேற்கொண்டுள்ளதாம்.