சின்னத்திரை வட்டாரத்தில் பரபரப்புடன் பேசப்படுவது நடிகை நிலானியின் மேட்டர்தான். லலித் குமார் என்பவர் நிலானியுடன் படுக்கையில் நெருக்கமாக இருந்த பல படங்களை வெளியிட்டு விட்டு பெட்ரோல் ஊற்றி தற்கொலை செய்து கொண்டார். திருமணம் செய்ய நிலானி மறுத்தார் என்று காரணம் சொல்லப்பட்டது. நிலானிக்கு முன்னரே கல்யாணம் ஆகி குழந்தைகளும் இருப்பதாக பின்னர்தான் தெரிந்தது.
லலித்குமார் குடிகாரனாக இருந்தார் அடிக்கடி பணம் கேட்டுத் தொல்லை செய்தார்,பல பெண்களுடன் அவருக்கு உறவு இருந்ததால் மணம் செய்ய மறுத்ததாக நடிகை நிலானி கூறினார். போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வரும் நிலையில் கொசு மருந்து குடித்து தற்கொலைக்கு முயன்றார் என்கிற செய்தி வந்திருக்கிறது. தவறான வாழ்க்கை தாறு மாறான விளைவுகளை உருவாக்குகிறது என்பது எவ்வளவு உண்மை!