வில்லங்கத்தை வெறி கொண்டு கிளப்பி விட்டாலும் அது எஸ்.டி.ஆர். பக்கம் பாயவே பயப்படுது. மைக்கேல் ராயப்பன் எப்போதோ எடுத்த டிரிபிள் ஏ படத்துக்கு கொடுத்த பிராது இன்னும் பைசல் செய்யப் பட வில்லை .செக்கச்சிவந்தவானம் படம் முடிந்து இதோ திரையை நோக்கி வந்து கொண்டிருக்கிறது. அப்போதெல்லாம் படப்பிடிப்பை நிறுத்துங்கள் என தயாரிப்பாளர் சங்கத்தை வலியுறுத்தாத ராயப்பன் இந்தப் படத்துக்கு மட்டும் ஏன் தடை போடச்சொல்கிறார் என்பது புரியவில்லை.
ஆனால் ஜார்ஜியா சென்ற சுந்தர்.சி குழுவினர் சிம்புவை வைத்து ஒரு பாடலை எடுத்து முடித்திருக்கிறார்கள் இன்னும் சில காட்சிகள் அங்கு படமாக்கப்பட விருக்கிறது. ஜார்ஜியாவுக்குப் பின்னர் சென்னையில் டேரா, .இந்த ஆண்டுக்குள் படப்பிடிப்பை முடித்து விடவேண்டும் என்பதில் சுந்தர் சி. உறுதியாக இருக்கிறார். புது வருடத்தில் ரிலீஸ். இவரது படம் முடிந்த கையோடு வெங்கட்பிரபுவின் ‘மாநாடு’ படத்துக்கு சென்று விடுவார் எஸ்.டி.ஆர்.