கொஞ்ச நேரம் ஓய்வு எடுத்து விட்டு காளை அடுத்த பொலிக்கு தயார் ஆகுமாம்.
அதைப் போல வம்புக்கு ஓய்வு கொடுத்து விட்டு வாயை மூடிக்கொண்டு இருந்த ஸ்ரீ ரெட்டி இன்று வாயை திறந்து விட்டார். ஆந்திராவில் ராம்கி என்கிற இயக்குநர் அம்மணியிடம் வசமாக சிக்கி இருக்கிறார்.
“ஆஸ்பத்திரியில் கம்பவுண்டர் வேலை பார்த்த ஆள். அங்கிருந்து விரட்டப்பட்டு சினிமாவுக்கு வந்தார். எப்படியோ சில வாய்ப்புகள். அதில் எப்படியெல்லாம் பெண்களை வசப்படுத்தினார் சீரழித்தார் என்பதையெல்லாம் சொல்லவா?அசிங்கம்யா!” என முக நூல் புத்தகத்தில் பதிவிட்டிருக்கிறார். நெல்லூர் தர்கா போய் வேண்டுதல் வைத்திருக்கிறார் ஸ்ரீ ரெட்டி.
இந்த பெண் மீது சென்னையில் போலீசில் புகார் கொடுத்த வராகி மற்றும் ,வழக்குப் போட்டவர்கள் எல்லாம் எந்த ஊரில் இருக்கிறார்கள் என்பது தெரியவில்லை. எல்லாமே விளம்பரப் பிரியர்கள்.