சீவி குமாரின் திருக்குமரன் எண்டர்டெயின்மெண்ட் மற்றும் கே. ஈ .ஞானவேல் ராஜாவின் ஸ்டுடியோ கீரின் நிறுவனம் இணைந்து தயாரித்து ரவிக்குமார் இயக்கத்தில் விஷ்ணு விஷால், மியா ஜார்ஜ், கருணாகரன் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் “இன்று நேற்று நாளை”.படம் வெளியான நாள் முதலே வசுல் வேட்டையை தொடங்கிய இப்படம், இதுவரை 3 நாட்களில் 3 கோடி ருபாயை வசுல் செய்து சாதனை புரிந்துள்ளது.அபினேஷ் இளங்கோவனின் அபி & அபி நிறுவனம் சார்பாக முதலில் 150 திரையரங்குகளில் வெளியான இப்படம், ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்ப்பால் இன்னும் பல திரையரங்குகளில் கூடுதலாக வெளியாகியுள்ளது.இந்நிலையில்,’இன்று நேற்று நாளை ‘படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் தொடங்கவுள்ளது. இப்படத்தின் முதல் பாகத்தின் படப்பிடிப்பின் போதே இரண்டாம் பாகத்தின் கதை உறுதி செய்யப்பட்டது. இன்று நேற்று நாளை படத்தின் இரண்டாம் பாகத்தில் பிரபல முன்னனி நடிகர் நடிக்கவுள்ளார். மேலும் விவரங்கள் இன்னும் சில தினங்களில் அதிகாரப்பூர்வமாக வெளிவரும் என்று தயாரிப்பு தரப்பு கூறியுள்ளது.