பிக்பாஸ் உயிர் மூச்சு விட இன்னும் சில நாட்களே இருக்கிறது. இதற்கிடையில் அந்த வீட்டுக்குள் போய் வந்தவர்களே நக்கலடிக்கும் நிலைக்கு ஆளாகி இருக்கிறார் பிக்பாஸ்.
ஒருவேளை இதுவும் விளம்பர தந்திரமாக இருக்குமோ? இந்த வாரம் வெளியேறப்போவது யாஷிகாவாக இருக்கலாம் என கட்டம் பார்த்து சிலர் கருத்துக் கணிப்பு வெளியிட்டிருக்கிறார்கள். அதில் டாப்பில் இருப்பது ரித்விகாதான்.35 ஆயிரத்துக்கும் அதிக ஓட்டுகள்.
டிபாசிட் காலியாகிற அளவுக்கு வாங்கி இருப்பது யாஷிகா. 14 ஆயிரத்து சில்லறை.
ஆக இதனால்தான் நேற்றைய டாஸ்க்கில் சில லட்சம் கொடுத்திருக்கிறார்கள் போலும்.
ஐஸ்வர்யா என்ன அடாவடித்தனம் பண்ணினாலும் மக்கள் வெறுத்தாலும் பிக்பாஸ் கண்டு கொள்ளாமல் இருப்பதற்கு காரணம் அவர் பிக்பாஸின் காதலராக இருக்கக்கூடும் என்கிற சந்தேகத்தைக் கிளப்பி இருக்கிறார் அந்த வீட்டுக்குள் போய் திரும்பி இருக்கிற ஆர்த்தி.!
இதுவும் விளம்பரத்தந்திரமோ!