அரசியலாகட்டும் சினிமாவாகட்டும் கருத்துகளை ‘கொட்டாமல்’ விடுவதில்லை கருத்து கஸ்தூரி. சில நேரங்களை மொக்கையாகவும் சொல்லிவிடுவதுண்டு. ஆனால் அதை ஒத்துக் கொள்வதில்லை.
அவர் போட்டது மொக்கை, சப்பை என்பதை அவரே அதிசயமாக ஒத்துக் கொண்டிருக்கிறார் கஸ்தூரி.
“சர்ச்சை கருத்தால் கஸ்தூரியை விமர்சித்த ரசிகர்கள்” என ஒரு செய்தியை ஒரு நாளேடு வெளியிட குஷியாகி விட்டார், கஸ்தூரி!
“அடங் கொப்புரானே …….பேப்பர்ல போடுற தலையங்க நியூஸா இது! நாம அப்பாவியா சொல்ற சப்பை கமெண்டை எல்லாம் சர்ச்சை கருத்தா மாத்துறிங்களே யப்பா! நாட்டுக்கு தேவையான எத்தனையோ விஷயத்த பேசுறேன் அதெல்லாம் உங்க கண்ணுக்கு தெரியாதே!”
வாரி விட்டதாக நினைக்கிறார் போலும். பாவம் !