கோடம்பாக்கத்தில் ஒரு படத்தின் வெற்றியை பார்த்து விட்டால் போதும்! அது போலவே பத்து கதைகள் மின்னல் வேகத்தில் தயாராகி விடும் .இது, அடுத்த வீட்டுக்காரி ஆம்பள பிள்ளை பெத்தா,அதை பார்த்த எதிர்த்த வீட்டுக்காரி இடிச்சுகிட்டு செத்தாளாம் என கிராமப்புறங்களில் இன்றளவும் பேசப்பட்டு வரும் சொலவடை போலத்தான். இதில் வேடிக்கை என்னவென்றால் அந்த பத்தில் ஓன்று கூட தேறாது என்பது தனிக்கதை! தற்போது பேய்களின் அலை சிறிது ஓய்நதுள்ள நேரத்தில் (1990 களில் ஹாலி வுட்டில்வெளியான back to the future படங்களைப்போல!)’ இன்று நேற்று நாளை யின் ‘ ‘டைம் மெசின்’ கதை வெற்றிப்பாதையில் உலாவரத் தொடங்க, தற்போது அதைப்போலவே டைம் மெசின் கதை படங்கள் அணி வகுக்க தொடங்கியுள்ளது. விஜய்யின் ‘புலி’ படத்தை இயக்கியிருப்பவர் சிம்பு தேவன் பொத்தி பொத்தி பாதுகாத்த இந்த படத்தின் கதை ரகசியம் தற்போது கோடம்பாக்கத்தில் வெளியாகி இயக்குனர் மற்றும் தயாரிப்பாளரின் வயிற்றில் ‘புளி’யை கரைத்துள்ளதாம்!( இருக்காத பின்னே இது எந்த படத்தின் உல்டா என்பதைத்தான் விலாவரியாக பிரித்து மேய்ந்து விடுவார்களே, நம் இணைய தள புலிகள்! ) வெற்றியை பாதித்து விடுமோ என்கிற பயம் தான் காரணம்! இப்படமும் ‘டைம் மெசின்’ சம்பந்தப்பட்ட கதை தான் என்கிறார்கள்.விக்ரம் குமாரின் இயக்கத்தில் உருவாகிவரும் சூர்யாவின் 24 படமும் டைம் மிஷின் கதைதான்)
பொதுவாகவே சிம்புதேவன் படங்களின் கதை பேன்ட்டஸி சம்பந்தப்பட்டதாக இருக்கும். கற்பனைக்கும் எட்டாத கற்பனைதான் .. 500 வருடங்களுக்கு முன்பு ஆரம்பிக்கிறது கதை. அரசிக்கும் அரசி பேரரசியாக விளங்குகிறார் ஸ்ரீதேவி. அதே அமைச்சரவையில் யாருக்கும் அடங்காத படைத்தளபதி நம்ம சுதீப். ஒரு கட்டத்தில் நாட்டையே அபகரிக்க திட்டம் போடுகிறான் படைத்தளபதி.( சரஸ்வதிசபதம் படத்தின் ஒரு பகுதி கதை தாங்க!) அதை நைசாக ஒற்றர்கள் மூலம் அறிகிற அரசி ஸ்ரீதேவி, அரண்மனை ஆலோசகர் நாசரை அழைத்து மதி நுட்பத்தால் அவனை அடக்கி , ஒடுக்க வழி கேட்கிறார். அவரும் தனது மந்திர தந்திர ஆலோசனைகளுக்கு பிறகு ஒருதிட்டம் வகுக்கிறார். ‘அவனை அடக்குகிற சக்தி நம் ஒருவருக்கும் இல்லை. ஆனாலும் ஒரு வழி இருக்கிறது. நம்மிடம் உள்ள டைம் மிஷினில் ஏறி, 500 வருடங்கள் முன்னோக்கி சென்று ஒரு வீரனை அழைத்து வந்தால் மட்டுமே இவனை அடக்க முடியும்’ என்கிறார். காலச் சக்கர எந்திரத்தில் ஏறி 2015 க்கு வருகிறார்கள். இங்கே துள்ளலும் துடிப்புமாக நம்ம விஜய். அவரை நைசாக பேசி அலேக்காக தூக்கி 500 வருடங்கள் பின்னோக்கி அழைத்துச் செல்கிறார்கள். போன இடத்தில் அரசி ஸ்ரீதேவிக்காக விஜய், சுதீப்போடு தன பராக்கிரம புஜ பலவித்தைகளை காட்டி மோதுகிறார். அதற்கப்புறம் என்ன நடக்கும் என்பதை தான் சின்ன குழந்தையும் சொல்லி விடுமே! அட!போங்கப்பா!.. ஹீரோ தான் கடைசியல ஜெயிப்பார்னு! சரி! இப்ப விசயத்துக்கு வருவோம் இந்த கதை பல இணையதளங்களில் வெளியாகி விட்டதால் (வெற்றியை பாதித்து விடுமோ என்கிற பயம் தான் காரணம்!) செய்வது அறியாமல் திகைக்கிறதாம் படக்குழு!