நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக விசுவரூபம் எடுத்து வரும் தென்னிந்திய நடிகர் சங்கப் பிரச்னை தற்போது கோர்ட்டு வரை சென்றுள்ளது எல்லோருக்கும் தெரிந்த செய்தி தான்! இந்நிலையில் எரிகிற தீயில் எண்ணையை ஊற்றும் விதமாக மன்னார்குடி இயல் இசை நாடக மன்ற சங்கத்திற்கு வந்த நடிகர் எஸ்.வி. சேகர் நிருபர்களிடம் கூறியதாவது:–
நடிகர் சங்க கட்டிடத்தை வாடகைக்கு விட்டதன் மூலம் ரூ. 60 கோடி ஊழல் நடந்துள்ளது. போலி உறுப்பினர்களை அதிகமாக சேர்த்துள்ளனர். அதனை வரைமுறைப்படுத்தவில்லை. 9 பேர் நிர்வாக குழுவில் இடம் பெற்றிருக்கும் போது சரத்குமாரும், ராதாரவியும் சேர்ந்து தன்னிச்சையாக அனைத்து முடிவுகளையும் எடுத்துள்ளனர். இதுவரை தாங்கள் பொறுப்பில் இருந்த போது நடந்த அனைத்து ஊழல்களையும் மூடி மறைப்பதற்காகத்தான் மீண்டும் தலைவர் பதவியை தக்க வைத்து கொள்வதற்காக முயற்சி செய்கின்றனர் என்றார். இது திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.