கடந்த 16-ம் தேதி முக்குலத்தோர் புலிப்படையின் சார்பில் சென்னையில் நடந்த கூட்டம் ஒன்றில் பேசிய திருவாடானை தொகுதி எம்எல்ஏ நடிகர் கருணாஸ், முதலமைச்சரை சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக கூறப்படுகிறது.முதலமைச்சர், மற்றும் காவல்துறை அதிகாரி என இருவர் மீதும் சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக பல்வேறு அரசியல் கட்சிகள் தங்களது கண்டனங்களை தெரிவித்து, கருணாஸை கைது செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தி வந்தனர்.இதையடுத்து கூட்டுச்சதி, வன்முறையை தூண்டிவிடுதல், கொலைமிரட்டல் விடுத்தல், பொதுஅமைதிக்கு குந்தகம் விளைவித்தல், அவதூறாக பேசியது உள்ளட்ட 8 பிரிவுகளின் கீழ் வள்ளுவர் கோட்டம் போலீசார் கருணாஸ் மீது வழக்கு பதிவு செய்தனர்.இதற்கிடையே கருணாஸ் தலைமறைவாகிவிட்டதாக தகவல்கள் பரவியதையடுத்து, கருணாஸை கைது செய்ய 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டிருந்தது.இந்நிலையில்,, செய்தியாளர்களிடம் பேசிய கருணாஸ்,’ தான் எங்கும் தலைமறைவாகவில்லை என்றும், வீட்டில்தான் இருப்பதாகவும் விளக்கம் அளித்திருந்தார்.இந்நிலையில், இன்று அதிகாலை ஏராளமான போலீசார் சென்னை சாலிகிராமத்தில் உள்ள கருணாஸ் வீட்டின் முன்பு குவிக்கப்பட்டனர். பின்னர் போலீஸ் உயரதிகாரிகள் வீட்டின் உள்ளே நுழைந்து அவரை அதிரடியாக கைது செய்தனர்.