இயக்குநர் மணிரத்னம் கதை என்றால் நாட்டு நடப்பு சார்ந்த கற்பனை இருக்கும்.இருவர் படம் எடுத்த அதே இயக்குநர்தான் செக்கச்சிவந்த வானம் படமும் எடுத்திருக்கிறார்.
கதை எப்படி?
அப்பா பிரகாஷ்ராஜ் பிரபலமான தாதா.
இவரது பிள்ளைகள் அரவிந்தசாமி,அருண் விஜய் ,சிம்பு.
அரவிந்த சாமியின் மனைவி ஜோதிகா.அருண் விஜய்யின் ஆள் ஐஸ்வர்யா ராஜேஷ். சிம்புவின் காதலி டயானா. குடும்பம்,காதல் என்று ஒரு ஏரியா கவர் ஆகிவிடுகிறது.
இப்ப அப்பாவின் இடத்துக்கு யார் வருவது என்கிற பதவிப் போட்டி! சண்டை!! அண்ணன் தம்பிகளுக்கிடையில்.! அப்படியானால் நிச்சயம் அரசியல் இருக்கும். வசனங்களில் ஜாடையாக சாடல்களும் இருக்கும் என எதிர்பார்ப்பதில் என்ன தவறு இருக்கமுடியும்?
சரி,விஜயசேதுபதிக்கு என்ன வேலை?
அவர் பிரகாஷ்ராஜின் முன்னாள் நண்பர்.போலீஸ் அதிகாரி. பத்திரிக்கை நிருபராக அதிதி. வத்தி வைப்பதற்கு தோதான ஆள்தான்!
ஆக இப்படி அரசியல் பொங்கலை சாதுர்யமாக கிண்டி விருந்து வைக்கப்போகிறார் மணிரத்னம்.
பார்ப்பதற்கு ஆவலுடன் உள்ளோம் ஐயா!