“ சாட்டை “ படத்தின் மூலம் அறிமுகமான மகிமா முதல் படத்திலேயே திறமையான புதுமுகம் என பெயர் பெற்றவர் மகிமா நம்பியார்..அவரை சந்தித்த போது.”.பிரபு சாலமன், ஜான்மேக்ஸ் மைனாவுக்கு பிறகு எடுக்கிற படம்..அன்பழகன்னு புது இயக்குனர். சமுத்திரகனி, தம்பி ராமய்யான்னு நட்சத்திர நடிகர்கள். இத்தனை ஜாம்பவான்கள் ஓடுகிற ரேசில் நானும் ஓடினேன். நல்ல நடிகைன்னு பேர் கிடைச்சது. என்னை .நிறைய படங்களில் நடிக்க கேட்டது உண்மையே. நான் படித்துக் கொண்டிருந்ததால் நடிக்க முடிய வில்லை. இப்பத் தான் படிப்பை முடித்தேன். மொசக்குட்டி, அகத்திணை ரிலீஸாகி விட்டது.
இப்ப விஜய் சேதுபதியுடன் மெல்லிசை, தினேஷ்சுடன் அண்ணனுக்கு ஜே, புரவி எண் என படங்களில் நடித்து கொண்டுதான் இருக்கிறேன்.
இப்ப கூட தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், போஜ்பூரி என ஐந்து மொழிகளில் ஒரே படத்தில் நடிக்கிறேன்.பூரிஜெகன்நாத் சார் தம்பி சாய்ராம் சங்கர்தான் ஹீரோ வினோத் விஜயன்ங்கிறவர் இயக்கும் படம்.. ராஜீவ் ரவி காமிரான்னு எல்லோருமே ஜாம்பவான்கள். ஷூட்டிங் போயிட்ருக்கு.
பொறுமையா இருந்தா சாதிக்கலாம்ங்கிற தேவ வாக்கின் மகிமையை உணர்ந்தவள். எத்தனை படம் நடிச்சோம்ன்னு கணக்குப் பார்க்க நான் தயாரில்லை.நடிச்சதுல எத்தனை படம் நல்ல படம்ன்னு கணக்கு பாக்குறவ நான்.
எனக்கு வயசு இருக்கு பொறுமையாக நின்னு சாதிப்பேன் என்று நம்பிக்கையுடன் கூறுகிறார் மகிமா.