“நடிக்க வந்த பிறகு கணவனே கண் கண்ட தெய்வம் என தனித்து இருக்க முடியுமா? கடவுள் கொடுத்த கவர்ச்சியை காட்சிக்கு பயன்படுத்தினால்தானே காசு பார்க்க முடியும்” என்பதில் நடிகை சோனம் கபூர் உறுதியுடன் இருக்கிறார்.
அண்மையில் ஃபேஷன் ஷோ நடந்தது.இதில் முக்கிய பங்கு வகித்தவர் நடிகை சோனம் கபூர்.
மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன என்பதைப் போல எட்டிப்பார்த்த இளமையின் திமிர்க்கு பார்வையாளர்களில் பலருக்கு பல்ஸ் டவுன்!
“கல்யாணம் ஆகிடுச்சி.ஆனந்த் அகுஜா நல்லவர். மனம் கோணாமல் நடந்து கொள்கிறார்.நான் நடிகையாச்சே! எனது தொழிலை விட முடியுமா? அதற்கான அவசியம் வரவில்லை.வாழ்க்கையும் சினிமாவும் நல்லாவே போகுது”என்கிறார் சோனம் கபூர்.
வீட்டுக்காரருக்கு சந்தோஷம்னா வீதியில் போறவன் சொல்றதை எல்லாம் கேட்கவேண்டியதில்லை.