மனதில் இருக்கிற ஆசையை மறைக்காமல் சொல்லிவிடுவது நல்லதோ , கெட்டதோ ஒரு சுமையை எறக்கி வைத்தது போலாகிவிடும் . மனசு லேசாகி விடும். அதைத்தான் பாலிவுட் நடிகை ஸ்வர பாஸ்கர் சொல்லி இருக்கிறார்.
‘வீரே டி என்கிற இந்திப்படம் வழியாக இந்தியாவுக்கே தெரிந்தவர். ஒரு பெண் சுய இன்பம் அனுபவிப்பதை அனுபவசாலி போல நடித்து பிரபலம் ஆனவர்.
இவர் சொல்கிறார், தனக்கு தெலுங்கு நடிகர் பிரபாஸ் மீது ‘ஆசை’ என்பதாக.
அந்த மனிதர் மீது ஆசைப்பட்டு இன்னமும் கை கூடாமல் கன்னியாகவே அனுஷ்கா வாழ்ந்து கொண்டிருப்பது தெரியாதோ என்னவோ!
“எனக்கு பிரபாஷ் மீது ஆசை. அவருக்காக பாகுபலி யை ஒன்பது தடவை பார்த்தேன், பாகுபலி 2 ஐ எட்டுத் தடவை பார்த்தேன். எங்கப்பா விசாகப்பட்டினம்தான். நான் சின்ன வயதில் நாகார்ஜுனா வின் படம் பார்த்திருக்கிறேன்” என ‘மனவாடு’ உரிமையைக் கொண்டாடுகிறார் . இப்படி பலருடைய மனதில் ஆசையை வளர்த்திருக்கிற பிரபாஷ் விரைவில் கல்யாணத்தை நடத்தி விட்டால் பல பெண்கள் நிம்மதியாக இருப்பார்கள்.