தமிழ்த்திரைப்படத்தயரிப்பாளர்கள் சங்கத் தேர்தலில் போட்டியிடும் என்னை ஜெயிக்க வைங்க ,அதுக்காக ஜெயிலுக்குப் போக நான் தயங்க மாட்டேன்.என்கிறார் நடிகர் மன்சூரலிகான். இது குறித்து மன்சூரலிகான் கூறியதாவது, ‘தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் ஏற்கெனவே போட்டியிட்டவர்களே, மீண்டும் மீண்டும் போட்டியிட்டுக் கொண்டிருக்கிறார்கள். பல வருடங்களாக அதே கொடுமையே நடந்து கொண்டிருக்கிறது. சாட்டிலைட் உரிமை, எப்எம்எஸ் உரிமை ஆகியவை 350, 400 படங்களுக்கு மேல் விற்கப்படாமலே இருக்கிறது. அதை யாரும் கண்டு கொள்வதேயில்லை…அதற்கு எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை…திரைப்படங்களின் பைரசி அன்றே விற்கப்படுகிறது. அதை அவர்கள் தடுப்பதேயில்லை.
அதனால், இதுவரைக்கும் தேர்தலில் போட்டியிடாதவர்களை வைத்துக் கொண்டு நான் போட்டியிட உள்ளேன். என்னைத் தேர்ந்தெடுத்தார்கள் என்றால் தமிழ்நாட்டில் ஒரே நாளில் திருட்டி சிடி விற்பதைத் தடுத்து விடுவேன். பேருந்துகளில் எல்லாம் கூட படங்களைப் போடுகிறார்கள். அப்படி போடுபவர்கள் மீது நடவடிக்கை எடுப்பேன், எப்படி கவனிக்க வேண்டுமோ, அப்படி கவனிப்பேன். ஒவ்வொரு பேருந்து நிலையத்திலும் போஸ்டர் அடித்து ஒட்டுவேன், புதுப்படம் போட்டால் தெரியப்படுத்துங்கள் தக்க சன்மானம் வழங்கப்படும் என்றும் அறிவிப்பேன். எங்க சொத்தைக் காப்பாத்த வேண்டிய சூழ்நிலையில் நான் இருக்கேன். என்னை ஜெயிக்க வைங்க ,என் கூடப் போராட நினைக்கிறவங்க என் பின்னாடி வாங்க, அதுக்காக ஜெயிலுக்குப் போக நான் தயங்க மாட்டேன்’. என்கிறார் நடிகர் மன்சூரலிகான்.