தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலுக்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து மேல்முறையீடு செய்தால், தங்கள் தரப்பையும் அழைத்து விளக்கம் கேட்க வேண்டும் என நடிகர் விஷால் மற்றும் பூச்சி முருகன் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் “கேவியட்’ மனு தாக்கல் செய்துள்ளனர். தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் வரும் . ஜூலை 15ம் தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இதற்கு விஷால் தரப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். நடிகர்கள் ஓட்டு போட வசதியாக விடுமுறை நாளான இரண்டாவது ஞயிற்றுக்கிழமை வைக்க வேண்டும் என்றும், தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலுக்குத் தடை விதிக்கக் கோரியும், ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் தேர்தல் நடத்த உத்தரவிடவும் கோரி ,நடிகர்கள் விஷால், கார்த்தி, நாசர் ஆகியோர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். இந்த வழக்கை விசாரணை செய்த உயர் நீதிமன்றம், தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலுக்கு இடைக்காலத் தடை விதித்தது. இதனை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்போவதாக தற்போதைய தலைவர் சரத்குமார் அறிவித்தார். இந்த நிலையில், நடிகர்கள் விஷால், கார்த்தி, நாசர் ஆகியோர் ‘கேவியட் மனு தாக்கல் செய்துள்ளனர். அந்த மனுவில், ‘நீதிபதி ரவிசந்திரபாபு பிறப்பித்த தீர்ப்பை எதிர்த்து எதிர்மனுதாரர் (நடிகர்கள் சங்கம்) மேல்முறையீடு செய்யும்போது அதில் எங்கள் தரப்பிடம் விளக்கம் கேட்காமல் உத்தரவு எதுவும் பிறப்பிக்கக் கூடாது என்று குறிப்பிட்டுள்ளனர். இதன் காரணமாக இரு தரப்பினர் இடையே மோதல் தீவிரமடைந்துள்ளது.