பாலக்காட்டு மாதவன் படத்தில் கதாநாயகனாக நடித்துள்ள விவேக்,கூறியதாவது,
“ஹீரோவாகத்தான் நடிப்பேன் என் எப்போதும் நான் பிடிவாதம் பிடிப்பதில்லை. எனக்கு ஏற்ற கதைகள் வந்தால் கதாநாயகனாக நடிப்பேன். இல்லாவிட்டால் காமெடி நடிகராகத் தொடர்வேன். இப்போது கஷ்மோரா என்ற படத்தில் காமெடியனாக மட்டுமல்ல, நல்ல குணச்சித்திர வேடத்திலும் நடிக்கிறேன். இதுவரை 27 லட்சம் மரக்கன்றுகளை நட்டிருக்கிறேன். ஒரு கோடி என்ற இலக்கை நோக்கிப் போய்க் கொண்டிருக்கிறேன். இந்தப் பணியில் நான் இறங்கிய பிறகு, பல விஷயங்களை மறந்துவிட்டேன். அத்தனை சந்தோஷமான பணி இது. ஒரு முறை டாக்டர் அப்துல் கலாம் கூட,, “என்ன விவேக்… உங்க தொழிலைக் கூட மறந்துவிட்டு, மரம் நடும் பணியில் தீவிரமா இருக்கீங்களாமே?” என்று கேட்டார். அரசியலுக்கு வருவீர்களா ? என்று கேட்கிறார்கள். அப்படியெல்லாம் எதுவும் இல்லை. எனக்கு எல்லா கட்சியிலும் நண்பர்கள் இருக்கிறார்கள். மக்களுக்கு ஒரு உதவி வேண்டும் என்றால் அவர்கள் மூலம் செய்து கொண்டுதான் இருக்கிறேன். ஒருவேளை நான் அரசியலுக்கு வந்தால், நடிப்பதைத் தொடரமாட்டேன். இரண்டு வண்டியில் சவாரி செய்யக் கூடாது என்பது என் கருத்து,” என்கிறார் நடிகர் விவேக்.