அடியோ,அறையோ எதை வாங்கிறதா இருந்தாலும் அதை அழகான கன்னிப் பெண் கையால வாங்கினா புண்ணியம்.
அதிலும் காதலி அடித்தால் கத கதன்னு தான் இருக்கும். கன்னம் நோக அடிக்க மாட்டாள் என்பது அவனுக்குத் தெரியாதா என்ன?
அத மாதிரிதான் இந்த செருப்பு சமாச்சாரமும்.!
“அடிக்கிறியா ,இந்த தங்கச் செருப்பால அடி! புண்ணியம்”என்று சொல்லும் அளவுக்கு துபாயில் ஒரு ஜோடி செருப்பு இருக்கிறது.!பட்டுத்துணி, தங்கம் போர்த்திய தோல். 236 வைரக்கற்கள். அப்படியே டாலடிக்கிறது. ஒன்பது மாதமாக தயாரிப்பு. விலை 17 மில்லியன் டாலர்.
நாம் ஆயுள் முழுவதும் சம்பாதித்தாலும் ஊகூம் …தேறாது. வாங்கனும்னா ஓர் அமைச்சரா பதவியில் இருக்கணும்.!