முதல் காரணம் தளபதி விஜய்.
இரண்டாவது காரணம் சன் குழுமம்.
இவர்கள் நடத்துகிற விழாக்களுக்கு எப்படி சென்னை சிட்டிக்குள் இடம் கொடுக்க முடியும் என்கிற மன நிலையில் தமிழக அரசு இருப்பதாக தெரிகிறது.
பாண்டவர்களுக்கு ஐந்து வீடு கூட கொடுக்க முடியாது என்று கவுரவர்கள் மறுத்தார்கள் என ஒரு கதை உண்டு.
அதைப்போல சர்க்கார் ஆடியோ வெளியீட்டு விழாவுக்கு சென்னைப் பெருநகர மாநகராட்சி எல்லைக்குட்பட்ட அரசு சார்ந்த இடங்களை அனுமதிக்க தமிழக அரசு மறுத்திருக்கிறது என்கிறார்கள்.
விஜய்க்கு மட்டும்தான் இந்த நிலையா?
அரசை எதிர்க்கிற கமல்,ரஜினி, விஷால் என்கிற சினிமாக்காரர்களுடைய விழாக்களுக்கும் கிடையாதுய்யா!
அப்படியானால் இவர்களும் சென்னைக்கு வெளியில் இருக்கிற கல்லூரிகளைத் தேட வேண்டியதுதானா?
சர்க்கார் ஆடியோ விழா தாம்பரம் சாய்ராம் எஞ்சினியரிங் கல்லூரியில் நடக்கவிருக்கிறது.
என்னய்யா நடிகர்களுக்கு வந்த சோதனை!