சாலிகிராமத்திலுள்ள பிரசாத் லேப்பில் பத்திரிகையாளர் கூட்டம் எது நடந்தாலும் வெளியாட்கள் கலந்து கொள்வது சர்வ சாதாரணமாகிவிட்டது. பிரஸ் ஷோவுக்கும் வந்து படம் பார்த்து விட்டு சென்று விடுகிறார்கள்.
அன்றும் அப்படித்தான்!
மக்கள் செல்வன் விஜயசேதுபதி, திரிஷா கலந்து கொண்ட ‘ 96’ படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் யாரோ ஒருவர் புகுந்து விட்டார். வந்தவர் டிபனை சாப்பிட்டு விட்டு சென்றிருந்தால் பரவாயில்லை. கேள்விகள் கேட்டு அவராகவே சிக்கிக் கொண்டார்.
“நீங்க என்னோட ரூமில்தானே தங்கி இருந்தீங்க?” என்று சேதுபதியின் ஞாபக சக்தியோடவே விளையாடி விட்டார்.
அவரும் ஜாலியாகவே பதில் சொல்லிவிட்டார் பத்திரிகையாளர் விளையாடுகிறார் என நினைத்து.!
“ஆரம்பகாலத்தில் அசிஸ்டெண்டுகள் சிலரின் ரூமில் தங்கி சாப்பிட்டு தங்கி இருக்கிறேன் “என கேசுவலாக சொன்னார்.
ஆனால் அடுத்துக் கேட்ட கேள்வியில்தான் பத்திரிகையாளர்கள் காண்டாகிவிட்டார்கள்.
அப்படி என்னதான் கேட்டார்கள் என்கிறீர்களா?
“உங்களுடன் நான் போட்டோ எடுத்துக்கலாமா?”
கத்திக் கூச்சல் போட்டு ஆளை விரட்டிவிட்டார்கள்.