ஷங்கர் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கவுள்ள ‘எந்திரன் 2’ படத்தின் ஆரம்பகட்ட பணிகள் தொடங்கியுள்ளது. எந்திரன் முதல் பாகத்தில் ரஜினிக்கு ஜோடியாக ஐஸ்வர்யாராய் நடித்திருந்த நிலையில், இரண்டாம் பாகத்தின் ஹீரோயின்
குறித்து ஷங்கர் வட்டாரம் கூறியபோது, இந்த படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடிக்க தீபிகா படுகோனிடம் பேச்சுவார்த்தை நடந்துவருவதாகவும், ஆனால் ஷங்கர் மிக அதிக நாட்கள் கால்ஷீட் கேட்பதால் தீபிகா படுகோனே யோசித்து வருகிறார். மேலும் தீபிகாவின் மற்ற படங்கள் பாதிக்காதவாறு தேதிகளை அட்ஜெஸ்ட் செய்து கொடுத்தால் போதும் என கேட்டுகொண்டுள்ளதால் தீபிகா இந்த படத்தில் நடிக்க ஒப்புக்கொள்வார் என்கிறார்கள்.மேலும் இந்த படத்தில் வில்லனாக நடிக்க பிரபல ஹாலிவுட் நடிகர் அர்னால்ட் ஒப்பந்தம் செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது. ரஜினி, ஷங்கர், ஏ.ஆர்.ரஹ்மான், ரத்னவேலு ஆகியோர் மீண்டும் இணையவுள்ள இந்த பிரமாண்டமான படத்தை ‘ கத்தி’லைகா நிறுவனம் தயாரிக்கும் என கூறப்படுகிறது.