காந்தி ஜெயந்தி அதுவுமா இப்படி ஒரு சேதி!
“நாடு கெட்டுப்போய்விட்டது “என்று சொல்லி வருகிறவர்களுக்கு டார்க் சாக்லேட் கிடைத்தது மாதிரி.
“படத்தில் சர்ச்சைக்குரிய வசனங்கள் இருக்கிறது.அவை நீக்கப்பட வேண்டும்” என மிரட்டுகிறவர்கள் இத்தனை நாட்கள் எங்கே போயிருந்தார்கள்? அதுவும் தொலைபேசியில் மிரட்டல் வந்ததாக சொல்கிறார்கள். செக்கச்சிவந்தவானம்,பரியேறும் பெருமாள் ஆகிய இரண்டு படங்களுமே நன்றாகவே ஓடுகிற நிலையில் இப்படியொரு மிரட்டல் வந்திருப்பதாக சொல்வது ….?
மணிரத்னம் சிவப்புச்சிந்தனைகாரர். அவருக்கு வெடிகுண்டு மிரட்டல் . கம்டியைத் தாங்க முடியாமல் மனிதர் எப்படி சிரிக்கிறார் பாருங்கள்.!
சீமத்தண்ணி பாட்டிலில் துணியை திரியாக்கி கொளுத்தி வீசினால் அதுக்குப் பெட்ரோல் பாம் என்கிற பயங்கரப் பேர். அந்த பாம் வீசின செய்தி கூட பம்பாய் படத்துக்குத்தான் என்பது நினைவு.
போலீசார் விசாரணை நடத்துகிறார்களாம்.