வி.ஜி. எஸ் நரேந்திரன் வழங்க . மெலடி மூவீஸ் தயாரிக்கும் படம் ‘தரணி’. குகன்சம்பந்தம் இயக்கியுள்ளார். ஆரி, குமரவேல், அஜய் கிருஷ்ணா, வருணிகா,சாண்ட்ரா நடித்துள்ளனர். சமீபத்தில்,இப்படத்தின் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது.இப்படத்தின் கே. பாக்யராஜ் ஆடியோவை வெளியிட்டு பேசியதாவது, “இங்கே மிஷ்கின் பேசும்போது சின்ன சஸ்பென்ஸ் வைத்தார். இந்தியாவிலேயே நான் பார்த்த ஒரே கண்டக்டர் என்றதும் நான் ரஜினிகாந்தா என்று நினைத்தேன் இந்தப் படத்தின் இசையமைப்பாளரைப் பற்றிப் பலரும் பேசும்போது அவரது பணி அனுபவத்தைப் புரிந்து கொள்ள முடிந்தது. கூடவே இருந்து அவரது பணியைப் பார்த்தவர்கள் சொல்லும் போது என்சோன் திறமையை அறிய முடிந்தது. அந்த அனுபவங்கள் அவர் இசையமைப்பாளராக பெரிதும் உறுதுணையாக இருக்கும் என்று நினைக்கிறேன். குகன் எடுத்த ட்ரெய்லர் சில காட்சிகளைப் பார்க்கும் போது இது எப்படிப்பட்ட படம் என்று புரியவில்லை. ட்ரெய்லர் பார்த்து சில காட்சிகளைப் பார்த்து படம் பற்றி முடிவு செய்யக் கூடாது.இந்தப் படத்தின் சில காட்சிகளைப் பார்க்கும் போது இது நாடகக்கலை பற்றிய கதையோ என நினைத்தேன்.ஆரி வரும் சில காட்சிகளைப் பார்க்கும் போது, வேறு மாதிரி தெரிந்தது. மணல் லாரிகள் வரும் காட்சிகளைப் பார்க்கும் போது அது வேறு மாதிரி தெரிந்தது. புரிந்து கொள்ள முடியவில்லை. பாடல் காட்சிகள் வேறுமாதிரி இருக்கின்றன.ஆனால் வித்தியாசமான படமாக இருக்கும் என்று மட்டும் புரிந்து கொள்ள முடிந்தது. ” என்று கூறி படக்குழுவினரை வாழ்த்தினார்.