‘மீ டூ ஹாஸ்டாக்’ வந்த பிறகு இப்படியெல்லாமா டைரக்டர்கள் இருப்பார்கள்? என்கிற கேள்வி எழாமல் இல்லை.
அவர்களால் தாலி கட்டிய மனைவியிடம் இப்படியெல்லாம் கேட்கமுடியுமா? அட , சின்ன வீடாக இருந்தாலும் சொல்லி விடுவார்களா என்ன?
“நீயும் நானும் மட்டும்தானே தனித்து இருக்கிறோம். ஒட்டுத்துணி இல்லாமல் எதிரில் வந்து ஆடிக்காட்டு” என்று சொல்வார்களா?? அது நள்ளிரவாக இருந்தாலும்!
செத்துப் போவாள். இவனா என் கணவன். பொறுக்கி என புழுங்கிப் போவாள். விடிந்ததும் தாலியை கழற்றி வீசி எறிந்து விட்டு பிறந்த வீடு போய் விடுவாள்.
வித்தியாசமான ஒரு டைரக்டர்,!
அந்த டைரக்டர் பெயர் விவேக் அக்னிஹோத்ரி. அப்பா வேதம் கற்றவர். அம்மா நடனக்கலைஞர்.
தன்னை ‘கன்சர்வேடிவ் நேஷனலிஸ்ட்’ எனச் சொல்வார்,இடது சாரிகளைப் பிடிக்காது.இவரது திருநாமம் விவேக் அக்னிஹோத்ரி.
இவரது இயக்கத்தில் நடித்தபோது தனக்கு நேர்ந்த அவலத்தைத்தான் தனு ஸ்ரீ சொல்கிறார் கேளுங்கள்.
“முதன் முதலாக சினிமாவில் நான் சந்தித்த கேவலமான அனுபவத்தைத் தான் சொல்லப்போகிறேன்.
அது நடிகர் இர்பான்கான் சம்பந்தப்பட்ட சீன். அவருக்கு குளோசப் எடுத்தார்கள். நானும் சுனில் ஷெட்டியும் அங்கிருந்தோம்.
“தனு! உன்னோட டிரஸ்ஸை கழட்டிட்டு இர்பானுக்கு ‘க்யு ‘கொடுங்கிறார் டைரக்டர் விவேக்.
டிரஸ்ஸை கழட்டிப் போடனுமா? அந்த சீனில் நானே இல்லேங்கிறபோது எதுக்கு எதிரில் போய் நிக்கணும்? அதுவும் அவுத்துப் போட்டுட்டு ! அவர் முகத்தில அப்பத்தான் எக்ஸ்பிரஷன் வருமா?
இர்பானுக்கே கோபம் வந்திருச்சி. “அவங்க எதிரில் நிக்கனும்கிற அவசியம் இல்லயே சார்”ங்கிறார் .
“எதுக்காக சார் டிரஸ் இல்லாம நிக்கனும்”னு சுனில் ஷெட்டியும் கேட்கிறார்.
இப்படி ஒரு அருவெறுப்பான ஆளை பார்த்ததில்ல ” என்கிறார் தனு ஸ்ரீ.
நம்ம கோலிவுட்டில் இப்படிப் பட்ட கெட்டபயல்கள் கிடையாது மக்களே!