“நமக்கு நாம்’ என்கிற படத்தின் இசை வெளியீட்டு விழாவில் அமைச்சர்கள் கடம்பூர்,ராஜூ, மா.பா.பாண்டியராஜன் ,இயக்குநர் எஸ்.பி.முத்துராமன், பத்திரிகையாளர் ராம்ஜி மற்றும் பலர் கலந்து கொண்டு பேசினார்கள்.அமைச்சர் கடம்பூர் ராஜு பேசும்போது “ஆதரவற்றவர்களுக்கு ஒரு இல்லம் நடத்தி, யதார்த்தத்தைப் படமாக்கி அதன்மூலம் மக்களுக்கு கொண்டு சேர்க்கின்ற நல்லப் பணியை செய்த சுந்தரமூர்த்தியைப் பாராட்டுகிறேன். குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை சூழ்நிலைக் காரணமாக ஆதரவற்று இருப்பவர்களுக்கு இல்லம் வைத்து நடத்துகிறார். மறந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இந்த இல்லத்திற்கு பல உதவிகளை செய்தார் என்று கூறினார்கள். அரசியலையும் சினிமாவையும் பிரிக்க முடியாது. மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். முதல் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி வரை அனைவரும் சினிமாவில் இருந்து அரசியலுக்கு வந்தவர்கள் தான். பல நல்ல கருத்துக்களை நாடகங்கள், சினிமா மூலமாகத்தான் மக்களுக்கு கொண்டு சேர்த்திருக்கிறார்கள். ஆகையால் சினிமாத் துறைக்கு அரசு எப்போதும் உறுதுணையாக இருக்கும்” என்றார்.