
ஒரு நடிகரின் விழாவினை தொகுத்து வழங்குவதால் அவர் அந்த நடிகரின் ரசிகன் ஆகி விட மாட்டார்.
தளபதி விஜய்யின் ‘சர்க்கார்’ படத்தின் இசை வெளியீட்டு விழாவைத் தொகுத்து வழங்கிய நடிகர் பிரசன்னாவின் கதையும் அப்படித்தான் ஆகி விட்டது.
ஒரு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் பொறுப்பு வருகிறபோது அதற்கு உண்மையாக இருக்க வேண்டும். அதை பிரசன்னா வெகு சிறப்பாகவே செய்திருந்தார். “உங்களுக்குத் தடையாக இருக்கக்கூடாது “என்று மைக்கை தள்ளி வைத்தார்.
இதைப் பார்த்த ஒருவருக்கு பிரசன்னா பரம ரசிகனாக இருப்பார் போலிருக்கே என்கிற சந்தேகம்.
” நான் தல ரசிகன். விஜய் மீது அளவற்ற மரியாதை உண்டு” என்பதாக கூறி இருக்கிறார்.நல்ல முன் மாதிரி!












