சமீபத்தில் வெளியான”பரியேறும் பெருமாள்” படத்தை பலரும் பாராட்டி வருகின்றனர். இந்நிலையில் இப்படத்தை இன்று பார்த்த உலகநாயகன் கமலஹாசன் இயக்குனர் மாரிசெல்வராஜ்,தயாரிப்பாளரும் இயக்குனருமான ரஞ்சித் ஆகியோரை பாராட்டினார்.இது குறித்து உலகநாயகன் கூறியதாவது, “எனது நண்பர்கள் பலர் போன் செய்து பரியேறும் பெருமாள் படம் பாருங்கள் என்று சொன்னதால்படம் பார்த்தேன். மிக அருமையான நல்ல முயற்சி படத்தின் தயாரிப்பாளர் பா.இரஞ்சித்திடமும், இயக்குனர் மாரி செல்வராஜிடமும் இந்தமுயற்சியையும், பயிற்சியையும் தொடருங்கள்… என வாழ்த்தினேன் என்றார்.