மெட்ராஸ், கொம்பன்படங்களைத் தொடர்ந்து கார்த்தி, பிரபல தெலுங்கு நடிகர் நாகார்ஜுனனுடன் இணைந்து,தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் நடித்து வரும் இந்த படத்திற்கு இதுவரை டைட்டில் வைக்கப்படாமல் இருந்தது. இரு மொழிகளுக்கும் பொருந்தும் வகையில் ஒரே தலைப்பாக இந்த படத்திற்கு வைக்க வேண்டும் என இயக்குனர் வம்சி விரும்பியதாகவும் அதற்கேற்றவாறு தலைப்பை தயார் செய்யும்படி தனது உதவியாளர்களிடம் அவர் கூறியதாகவும் கடந்த சில நாட்களுக்கு முன் செய்திகள் வெளிவந்தது.இந்நிலையில் கார்த்தி, நாகார்ஜுனன் நட்பை விளக்கும் விதமாக இந்த படத்திற்கு ‘தோஸ்த்’ என்ற தலைப்பை படக்குழுவினர் தேர்வு செய்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. ஆனால் தமிழில் பெயர் வைத்தால்தான் தமிழக அரசின் வரிவிலக்கு கிடைக்கும் என்பதால் கடைசி நேரத்தில் தமிழுக்கு வேறு டைட்டில் வைக்கப்பட வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. இப்படத்தில் கார்த்திக்கு ஜோடியாக தமன்னா நடித்து வருவது குறிப்பிடதக்கது.