தமிழில் கையெழுத்துப் போடுங்கள் என்பதாக சிலர் கோடம்பாக்கத்தில் குரல் கொடுத்து வருகிறார்கள். அவுடதம் படத்துக்காக 3 லட்சம் குட்டிப் பேனா இலவசமாக கொடுத்து ‘தமிழில்’ கையெழுத்துப் போடுங்கள் என்பதாக சொன்னார்கள்.
நல்ல செயல்தான்! ஆனால் இத்தனை ஆண்டுகளாக தூங்கியது ஏன் என்பதுதான் புரியவில்லை. இயக்குநர் பாக்யராஜ் கேட்டதிலும் தவறு இருப்பதாகத் தெரியவில்லை.
” தமிழில் தான் எப்போதும் நான் கையெழுத்து போடுகிறேன் . காசோலைகளிலும் கூடத் தமிழில் தான் கையெழுத்து போடுவேன்.
ஆனால் தமிழில் கையெழுத்து போடுவதால் தமிழ் வளர்ந்து விடுமா?
நான் சைனா போனபோது அங்கு ஆங்கிலமே இல்லாமல் இருக்கிறார்கள் அவர்கள் எல்லாவற்றிலும் முன்னேறித்தான் இருக்கிறார்கள். ஆங்கிலம் பேசுவதற்கு ஆட்களைத் தேடிப் பிடிக்க வேண்டும் .நான் அங்கு போயிருந்த போது தகவல் தொடர்புக்கு சிரமமாக இருந்தது.
அண்மையில ஒரு தெலுங்குப்படத்தின் படப்பிடிப்புக்கு கம்போடியா போக வேண்டியிருந்தது. அங்கு போன போது அவர்களுக்கு ஆங்கிலம் தெரியாததால் தகவல் தொடர்பு பிரச்சினையால் நான் பாதியிலேயே நாடு திரும்ப வேண்டியிருந்தது.
என் பாஸ்போர்ட்டில சீல் போட இடமில்லை என்பதுதான் பிரச்சினை. அது மட்டுமல்ல விமான நிலையத்தில் என்னை ஒரு குற்றவாளியைப்போல நடத்தினார்கள்.. .
சில நாடுகளில் பிரான்சில் தெரிந்திருந்தாலும் ஆங்கிலத்தில் பேச மாட்டார்கள் இப்படிப் பல பிரச்சினைகள் உள்ளன,
தமிழைக் காப்பாற்ற அரசியல்பூர்வமான நடவடிக்கைகள் வந்தால்தான் முடியும்.”
என்றார் .
இவர் சொன்னதிலும் என்ன தப்பு ? அரசியல்வாதிகள் தமிழைக் காக்க என்ன நடவடிக்கை எடுத்திருக்கிறார்கள்?