சி.பிரேம்குமார் இயக்கத்தில் விஜய்சேதுபதி த்ரிஷா உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் படம் 96.
இந்தப்படம் இன்று (அக்டோபர் 4) வெளியாகிறது.
இப்படம் அதிகாலையில் வெளியாவதாக இருந்தது என்றும் ஆனால் திட்டமிட்டபடி வெளியாகவில்லை என்றும் சொல்லப்படுகிறது.
அதற்குக் காரணம் இப்படத்தைத் தயாரித்த தயாரிப்பாளர் நந்தகோபாலின் முந்தைய படமான கத்திசண்டை படத்தில் ஏற்பட்ட சிக்கல்தான் காரணம் என்று சொல்லப்படுகிறது.
இந்நிலையில் தயாரிப்பாளர் ஜேஎஸ்கே சதீஷ் பேசியதாக உலாவரும் ஒலிப்பதிவில் , இந்தப்படம் தாமதமாக தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் விஷால்தான் காரணம் என்று அறிந்ததாகவும் அதுபற்றி விசாரிக்க அவரைத் தொடர்புகொள்ள முடியவில்லை என்றும் சொல்லப்படுகிறது.
வெளியீட்டுக்கு முந்தைய நாள் பஞ்சாயத்து நடத்தி பட வெளியீட்டுக்கு இடையூறு செய்வதை எதிர்த்துத்தான் விஷால் தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் போட்டியிட்டார்.
இப்போது அவர் மீதே அப்படி ஒரு குற்றச்சாட்டு வெளிப்படையாக வைக்கப்பட்டிருக்கிறது.
இதுகுறித்து விஷால் விளக்கமளிப்பாரா?