நம்மூர் நடிகைகள் கார் ஓட்டுவார்கள். ஆனால் சைக்கிள் ஓட்டுவதற்கு பயம். விழுந்து முட்டி உடைந்து விட்டால்?ஆனால் திரிஷா மாதிரி நடிகைகள் பங்கி மங்கி ஜம்பிங், ஸ்கையிங் ஸ்விம்மிங் என கில்லாடிகளாக இருப்பார்கள். அதில் காஜல் அகர்வாலையும் சேர்த்துக் கொள்ளலாம்.
கோலாலம்பூர் போயிருந்த காஜல் வாடகைக்கு ஜெட் விமானத்தை எடுத்துக் கொண்டு வானத்தை அளக்கபோய்விட்டார். நான்கு பேர் பயணிக்கிற ஜெட் அது. சிறிது நேரம் காஜல் இயக்க அதை அவரின் பின்னால் அமர்ந்திருந்த பைலட் கண்காணித்திருக்கிறார்.