சென்னை நகர மக்களின் கனவுத்திட்டமான மெட்ரோ ரயில் சேவை கடந்த திங்கட்கிழமை தமிழக முதல்வர ஜெயலலிதாவால் திறந்து வைக்கப்பட்டது.மு.க.ஸ்டாலின்,விஜயகாந்த்,உள்ளிட்ட அரசியல் தலைவர்களையும், சென்னை மக்களின் மனதையும் கவர்ந்துள்ள இந்த மெட்ரோ ரயில், தற்போது கோலிவுட் பார்வையிலும் பட்டுவிட்டது. முதன்முதலாக இயக்குனர் ஆர்.கண்ணன் இயக்கி வரும் “போடா ஆண்டவனே என் பக்கம்’ என்ற படத்திற்காக விரைவில் மெட்ரோ ரயில் நிலையத்தில் படப்பிடிப்பு நடக்கவுள்ளது.ஜெயங்கொண்டான், கண்டேன் காதலை, ஒரு ஊர்ல ரெண்டு ராஜா போன்ற படங்களைத் தொடர்ந்து இயக்குனர் ஆர்.கண்ணன், தற்போது “போடா ஆண்டவனே என் பக்கம்’ என்ற படத்தை இயக்கி வருகிறார். விஷ்ணு, பிரயாகா மார்ட்டின் ஆகியோர் நடித்து வரும் இந்த படத்தின்
ஒரு காட்சியில் விஷ்ணுவும், பிரயாகாவும் ரயிலில் சென்று கொண்டிருக்கும்போது காதல் ஏற்படுவதாக ஒரு காட்சி வருகிறது. இந்த காட்சியை புறநகர் ரயிலில் படமாக்க முதலில் இயக்குனர் ஆர்.கண்ணன் திட்டமிட்டிருந்தாராம்.. ஆனால் தற்போது மெட்ரோ ரயில் சேவை தொடங்கி விட்டதால், மெட்ரோ ரயிலிலேயே இந்த காட்சியை எடுக்க முடிவு செய்துள்ள கண்ணன் ,, இதற்கான அனுமதி கோரி மெட்ரோ ரயில் நிர்வாகத்திற்கு கடிதம் எழுதியுள்ளதாகவும், அனுமதி கிடைத்ததும் படப்பிடிப்பு நடைபெறும் என்று கூறப்படுகிறது.