நடிகர் ரஜினிகாந்த் தற்போது கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் பேட்ட படத்தில் நடித்து வருகிறார்.இப்படத்தின் (ரஜினிகாந்தின்) புகைப்படங்கள் சமீபத்தில் வெளியாகி வைரலாகின.இந்த நிலையில் தற்போது இப்படத்தின் இரண்டாவது லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளனர். லக்னோ படப்பிடிப்பில் பார்த்த ரஜினிக்கும் அப்படியே நேர்மாறாக காட்சியளிக்கும் ரஜினி, கழுத்தில் ஒரு தங்க செயின், வெள்ளை சட்டை நெற்றியில் விபூதி பட்டை,முறுக்குமீசை என அட்டகாசமாக காட்சியளிக்கிறார். இந்நிலையில் பேட்ட படத்தின் 2 வது லுக் தற்போது வெளியாகி, சில மணிநேரத்திலேயே டாப் ட்ரெண்டிங்கில் முதல் இடம் பிடித்துள்ளது.ரஜினியின் இந்த தோற்றம் பிளாஷ்பேக் காட்சிகளாக இடம் பெறுவதாக கூறப்படுகிறது.