சர்க்கார் பட விழாவில் முத்தாய்ப்பாக பேசுன தளபதி விஜய் பஞ்ச் டயலாக் ஒன்றை பத்தவைத்தார், யாரை நோக்கி வீசப்பட்டதாக தளபதி ரசிகர்கள் பெருமைப் பட்டார்களோ அது நேர்மாறாக அவர்களை நோக்கி திரும்பிய களரி ஆயுதமாக வந்திருக்கிறது.
“உசுப்பெத்துறவன் கிட்ட உம்முன்னும், கடுப்பெத்துறவன் கிட்ட கம்முன்னும் இருந்திட்டா நம்ம லைப் ஜம்முன்னு இருக்கும்” என்று தளபதி எடுத்து விட்டார். அரங்கமே அதிர்ந்தது. ஆனால் அது கயல்விழி என்கிற பெண் நவ.30, 2017 -ல் டிவீட் பண்ணியதாம்.
“என்னோட லைன்ஸ்தான் அண்ணா அந்த டிவிட்.அதைப் பேசியது எனக்குப் பெருமையா இருக்கு கர்வமா இருக்கு ” என்று 3 ம் தேதி டிவீட் பண்ணியிருக்கும் கயல்விழி ‘தல’அஜித்தின் விசிறி.எங்க வந்து விதி விளையாடி இருக்கிறது.
“நாங்க என்ன பேசனும்கிறத நாங்கதான் முடிவு பண்றோம்.நீங்க என்ன பேசணும்னும் நாங்கதான் முடிவு பண்றோம்”என்பதாகவும் கயல்விழி கமெண்ட் பண்ணியிருக்கிறது.