“இளமையெல்லாம் வெறும் கனவு மயம்
இதில் மறைந்தது சிலகாலம்,
தெளிவும் அறியாது,முடிவும் தெரியாது,
மயங்குது எதிர்காலம்”
–இப்படித்தான் ஆகிப்போனது அனுஷ்காவின் பருவ காலம்.
பூ மலரும் காலத்தில் செடியில் வேர் பிடிக்கவில்லை.
வேர் பிடித்த காலத்தில் நீர் அற்றுப் போனது நிலத்தில்!
என்னதான் செய்வாள்?
இது போலாகிவிட்டது அனுஷ்காவின் வாழ்க்கையும்!
பிரபாஷ் -அனுஷ்கா காதலிக்கிறார்கள் ,விரைவில் மண வாழ்க்கை என்றார்கள்.
பொய்யாகிப் போனது!
உடல் இளைப்பதற்கு வெளிநாடு போனார் என்கிற சேதியால் வெகுவாக பாதிக்கப்பட்டிருக்கிறார். அனுஷ்கா.
திருமணத் தடைகள் நீங்குவதற்கு வேள்விகள் நடத்தினர் பெற்றோர்.
ஆனால் திரை உலக வாழ்வுக்கே மங்களம் பாடப் போகிறேன் என்கிறாராம் அனுஷ்கா.
விதி வலியது.