“எந்தக் கோவில் ஆனால் என்ன ,
தெய்வம் தெய்வம்தான்!
எந்த தெய்வம் ஆனால் என்ன ,
கோவில் கோவில்தான்!”
இப்படித்தான் அமரர் என்.டி.ராமராவ் தனது மனைவி பசவ தாரகம் அம்மையாரை பூஜை அறையில் வைத்து பூஜித்து வந்தார். கடவுளுடன் கடவுளாக,!
20 வயதிலேயே கல்யாணம் நடந்து விட்டது. இனிய வாழ்க்கை. இல்லறம் நல்லறமாக நடந்தது. எட்டு மகன்.நான்கு மகள். ஆக டஜன் பிள்ளைகள். அந்தக் காலத்தில் ஏது குடும்பக்கட்டுப்பாடு,!
கடுமையான கேன்சர் .மனைவியை காப்பாற்றி விடலாம் என்றுதான் நினைத்தார். முடியவில்லை. முடிந்து போனது வாழ்க்கை.
முதல்வராக இருந்தபோது கேன்சர் இன்ஸ்டிடுயூட் தொடங்குவதற்கு திட்டமிட்டவர் இவர்தான்!