ரவுடி சி.எம். விஜய தேவரகொண்டாவுக்கு சத்தியமாக அது வித்தியாசமான அனுபவம்தான். யாரைப் பார்த்தாலும் ஜில்ப்பா தலை,தாடி மீசையுடன் அலைகிறபோது நோட்டா கதாநாயகன் விஜய்தேவரகொண்டாவை மட்டும் அடையாளம் கண்டு கொள்ள முடியுமா?
வித்தியாசமாக பேட்டி கொடுக்கிறேன் பேர்வழி என்று ஆட்டோவில் சென்றிருக்கிறார்கள். இரவு நேரம். தூறல் வேற.
“சூடா சாயா அடிச்சா என்ன?”
நல்ல வேளை…வேற தேடாம இருந்தாங்களே?
ஒரு டீக்கடை ஓரமா ஆட்டோவை நிறுத்தி ‘டீ’க்கு ஆர்டர் பண்ண அந்த நேரமாகப் பார்த்து போலீஸ் வந்து விட்டது.
அவர்களுக்கே உரிய மரியாதையுடன் “எட்றா ஆட்டோவை !” என்று லத்தியால டாப்பை தட்டி விரட்டி இருக்கிறது ‘உங்கள் நண்பன்!’போலீஸ்.
ஹைதராபாத்தில் இப்படி சாலையோர டீக்கடையில் விஜய தேவரகொண்டாவினால் நிற்கவாவது முடியுமா?
“என்ன சார் இது? ஹைதராபாத்தில் ஆட்டோ டிரைவரை பிரீத் அனலைசரில் ஊதச் சொல்வார்கள். இங்க இப்படி ஹார்சா நடந்துக்கிறாங்களே!” என புலம்பி இருக்கிறார் மாஸ் ஹீரோ.
அடுத்த படத்தில டயலாக்கில் உரிச்சி தொங்க விடுங்க.!