ஆஷ்னாசவேரியிடம் மச்சம் பார்க்கிறாரா அல்லது விமல் கேட்கிறாரா?
வெள்ளித்திரைப் பக்கம் வந்தே ரொம்ப நாளாகிப் போச்சே என ஸ்டுடியோ பக்கம் வந்தால் மனுஷன் மச்சம் தேடிக் கொண்டிருக்கிறாரே?
இயக்குநர் ஏ.ஆர். முகேசுக்கு பார்வையின் பொருள் புரிந்து விட்டது.
“படத்தின் பேரே ‘இவனுக்கு எங்கோ மச்சம் இருக்கு’ என்பதுதான். விமல்,சிங்கம்புலி ரெண்டு பேரும் மெடிகல் ஷாப்பில் வேலை பாக்கிறாங்க.அப்பப்ப சின்ன சின்ன திருட்டு. ஆனந்த ராஜ்க்கு சொந்தமான ஒரு சாமானை விமல் அண்ட் சிங்கம்புலி ஆட்டயப் போட்ருவாங்க. அது விலை மதிப்பில்லாத உயர்ந்த பொருள். இதனால விமலை ஆனந்தராஜ் விரட்ட,போலீஸ் அதிகாரிகள் மன்சூர்,பூர்ணா துரத்த கதை காமடியா போகும். கிளாமருக்கும் பஞ்சம் இருக்காது. ஜாலியான பொழுது போக்குப் படமா இருக்கும்”என்றார் முகேஷ்.