ஐந்து ஆண்டுகள் கதாநாயகியாக தொடர்ந்தாலே அது கோலிவுட்டின் ஹீரோயின் ரிக்கார்ட். ஆனால் பல ஐந்தாண்டுகள் கடந்தும் திரிஷாவை அடக்க முடியவில்லை.கட்டவிழ்ந்த காமதேனுவாக ஆந்திரம், தமிழகம், மலையாளம் என திக் விஜயம் செய்து கொண்டிருக்கிறார். அவருக்கு எதிரான செய்திகள் கிளம்பினாலும் எழுந்த வேகத்திலேயே விழுந்து விடுகின்றன. .
அண்மையில் வெளியான 96 காதல் படம் பிரமானடமான வெற்றியைத் தந்திருக்கிறது. வெளியான படங்களிலேயே 96, பரியேறும் பெருமாள், நோட்டா ஆகிய மூன்று படங்களும் மக்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றிருக்கிறது.
இதனால் திரிஷா மிகவும் உற்சாகம் அடைந்திருக்கிறார். நல்ல கதையம்சமும் நடிப்பதற்கு ஸ்கோப் உள்ள படமுமாக இருந்தால் சம்பளத்தைப் பரிசீலனை பண்ணவும் தயார் என சொல்லி இருக்கிறார்.
இதுதான் பல நடிகைகளுக்கு கலக்கத்தைக் கொடுத்திருக்கிறது.