இன்று நன்றி தெரிவிப்பதற்காக பத்திரிகையாளர்களைச் சந்தித்தனர் ’96’ படக்குழுவினர். அப்போது ஊடகத்தைச் சேர்ந்தவர்கள் ‘விஷால் தொடர்பான ‘கேள்விகளை அடுக்கினார்கள். தகுந்த பதில்களை சொன்னார் விஜயசேதுபதி. எந்த கான்ட்ரவர்ஸியிலும் சிக்க வில்லை.
“தமிழ்ச்சினிமா இப்போது ஆரோக்கியமாக இருக்கிறது. பரியேறும் பெருமாள் ரொம்ப சிறப்பாக இருக்கு. நிறையப் பேர் கொண்டாடுகிறார்கள்.அதுக்கு நன்றி.சாதி எந்த எக்சல்,ஏரியல் போட்டுக்கழுவினாலும் போகாது.சாதி,அதனுடைய தீவிரவாதம் பற்றி அருமையாக சொன்ன படம்.அந்தப் படத்தை அழகா கொண்டாடுறீங்க. நன்றி” என்று பேசினார் விஜய சேதுபதி.