‘ஆடவர் உலகைப் பழி தீர்க்க ,
அழகே உன்னை அவன் தூது விட்டான்,
நாடக நாட்டியம் ஆடவிட்டான்,
நானடியோ இங்கு வாடுகிறேன்!’
அனார்கலியைப் பார்த்ததும் கண்ணதாசனது வரிகள் வந்து வதைக்கிறது.
அனார்கலி….அழகிய நடிகை. கேரளத்துச் சிட்டு. படங்கள் வரிசையாக நிற்கின்றன.
வழக்கம் போல ‘இந்த சினிமாவில் பெண்களின் நிலைமை என்ன?’
பழக்கமாகி விட்ட பதில் இல்ல! ஒரு அறிமுக நடிகையான அவரிடம் அவ்வளவு எச்சரிக்கை கலந்த பதில் வந்தது ஆச்சரியமாக இருந்தது.
“அவ்வளவாக பாதுகாப்பு இருப்பதாக சொல்ல முடியாது. இளைய தலைமுறையைச் சேர்ந்தவர்களுக்கு அவ்வளவாக ஆபத்து இல்லை. தனிப்பட்ட முறையில் எனக்கு எந்த விதமான பிரச்னையும் வரவில்லை. நம்மைச் சுற்றி வருகிற அறிமுகம் இல்லாதவர்களிடம் எச்சரிக்கையாக இருப்பது நல்லது.எந்த துறையாக இருந்தாலும் பெண்கள் எச்சரிக்கையாக இருப்பது நல்லது”
“கிளாமராக நடிப்பீங்களா? கிஸ் பண்ணி நடிப்பதில் உடன்பாடு உண்டா?”
“அதென்னங்க. ! நடிக்க வந்தாச்சு. சினிமாவுக்கு கவர்ச்சியும் அவசியம்தான். கதைக்கு கிளாமர் ஒரு பில்லர் மாதிரி.! அந்த மாதிரியான கேரக்டர் வந்தால் முதலில் என்னுடைய உடல் வாகுவை மாத்திப்பேன். அப்பத்தான் கிளாமர் டிரஸ் எடுப்பா இருக்கும்.
கிஸ் பண்றது எனக்கு உடன்பாடுதான்! அப்பா,அம்மா என்ன நினைப்பாங்களோ தெரியாது.”
“அனார்கலியை எந்த சலீமாவது காதலித்தது உண்டா?”
“இல்லிங்க. ஆனால் எனக்கு இவர்தான் பொருத்தம் னு தோணுச்சுன்னா அவரிடம் காதலை சொல்லி விட மாட்டேன். அவர் என்னிடம் சொல்லத் தயங்கலாம் .அப்படி ஒரு டைப்பாக இருந்தால் என்ன பண்றது? வேற யாரையும் காதலிக்கல,நல்ல ஆளாகத்தான் இருக்கார்னு பைனலா பீல் வந்ததும் நானே போய் “யோவ் உன்னை விரும்பறேன்னு சொல்லிடுவேன்” என்கிறார் அனார்கலி.