நக்கீரனை சாம்பலாக்கிய கூந்தல் விவகாரம்..
வாத்சாயனின் சாஸ்திரத்தில் பெண்ணின் வியர்வை கூட வியக்க வைக்கும் கதை சொல்லும். முழுமையான ,மன நிறைவான தாம்பத்தியத்தின் வெளிப்பாடே வியர்வைதான் என்கிறது காமநூல். பெண்ணின் உடலில் தொப்புள் கூட விளையாட்டு மைதானம்தான் என்கிறார்கள். இல்லாவிட்டால் அதில் கேப்டன் பம்பரம் விட்டிருப்பாரா?
“தொப்புளில் மது நிரப்பி அதை அருந்துவதும் ஒரு சுகம் எனது தொப்புளில் விரல் பதித்தால் உடம்பின் மத்தியப்பகுதியில் நரம்பில் கிளர்ச்சி ஏற்படும் “என்கிறார் பாடகி மடோனா.
ஆக பெண்ணின் அங்கம் ஒவ்வொன்றும் காமத்தின் திறவுகோலாகவே அமைந்திருக்கின்றன. வலிமையான பெண்ணையும் தனது சாகசத்தால் வீழ்த்துவது ஒரு கலை. அந்த வித்தையைக் கற்றவர் போல இயக்குநர் விகாஸ்.
அவர் மீது ஏற்கனவே ஒரு பெண் பாலியல் புகார் கொடுத்திருக்கிறார். தற்போது கங்கனாவும்!
க்யூன் படத்தின் இயக்குநர்தான் விகாஸ்.
“அந்த டைரக்டருக்கு கல்யாணம் ஆகி விட்டது. இருந்தாலும் பெண் ஆசை பிடித்தவர்.அடிக்கடி செக்ஸ் பிரச்னைகள்.” என்கிற கங்கனா தன்னிடம் அவர் நடந்து கொண்ட முறை பற்றி தற்போதுதான் வாய் திறந்திருக்கிறார்.
“நான் அவரை எந்த இடத்தில் பார்த்தாலும் இறுகப் பிடித்துக் கொள்வார் . எனது தலைமுடியை முகர்வார். இந்த வாசத்தை மிகவும் விரும்புகிறேன்” என்பார். அவரை முரட்டுத்தனமாக தள்ளி விட்டு விடுவேன். தற்போது அவர் மீது புகார் சொல்லி இருக்கிற பெண்ணை நான் ஆதரிக்கிறேன். இப்படித்தான் படக் கம்பெனியைச் சேர்ந்த ஒரு பெண்ணை கோவா ஓட்டலில் வம்பு செய்திருக்கிறார். அவர் பதவியை விட்டு போய்விட்டார். பெண்களிடம் வம்பு செய்கிறவர்கள் தண்டிக்கப்பட வேண்டியவர்கள்.”என்கிறார் கங்கனா.