“சமத்துவமா, நவயுக புரட்சியா இப்படியெல்லாம் “என சிலரும், “மத நம்பிக்கைகளில் கை வைக்கலாமா, காலம் காலமாக இருந்து வரும் சம்பிரதாயங்களை மாற்ற நீதி மன்றத்துக்கு உரிமை இல்லை” என சிலரும், “மற்ற மதச்சடங்கு சம்பிரதாயங்களில் கை வைக்க முடியுமா? “என சிலரும் சுப்ரீம்கோர்ட் உத்தரவை பந்தாடி வருகிறார்கள்.
“சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு எல்லா வயது பெண்களும் செல்லலாம்” என உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு கேரளா அரசு சம்மதம். ஆனால் அய்யப்ப பக்தர்கள் கடுமையாக ஆட்சேபனை தெரிவிக்கிறார்கள்.
தேசிய அய்யப்ப பக்தர்கள் சங்கம் உச்ச நீதி மன்றத்தில் ரிவ்யூ மனு தாக்கல் செய்திருக்கிறது.
எத்தகைய உத்திரவு வருமென தெரியவில்லை.
காத்திருப்போம் .!